Yenga karuppasamy Avar yenga karuppasamy ayyappan bajanai song lyrics

எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி ஐயப்பன் பஜனை பாடல் 

Yenga karuppasamy Avar yenga karuppasamy ayyappan bajanai song


எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி

அக்கினியில் பிறந்தவராம் அரனாரியின் மைந்தனவன் 

எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி

முன் கொண்டாய் காரனவன் முன்கோப காரனவன் 

சந்தனப் பொட்டுக்காரன்  சபரிமலை காவல்காரன்

எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி


ஸ்வாமியே.......... சரணம் ஐயப்பா..


சாட்டைமுடி காரனவன் சாமிகளைக் காத்திடுவான் 

சல்லடையைக் கட்டி வரான் சாஞ்சி சாஞ்சி ஆடி வரான் 

எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி

வில்லு பாட்டுப் பாடி வரான் வித விதமா ஆடி வரான் 

பந்தம் கையில் பிடிச்சி வரான் பாரி வேட்டை ஆடி வரான்

எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி


அச்சன் கோவில் ஆண்டவர்க்கு எதிராக இருப்பவராம் 

பதினெட்டு படிகளுக்கு காவலாக இருப்பவனாம் 

எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி


தட்சையை கட்டி வரான் கை அருவா காட்டி வரான் 

ஒய் ..மீசையை முறுக்கி வரான் முச்சந்தியில் நடந்து வரான் 

எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்பண்ண  சாமி


வில்லாளி வீரனுக்கும் வீர மணிகண்டனுக்கும்

இருமுடிய சுமக்கும் போது பாதுகாக்க வருபவனாம் 

எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி


கர்பூர ஆழி முன்னே கடவுளாக நின்றிடுவார் 

ஒய்.. கருப்பு வேட்டி கட்டிக்கிட்டு பாவங்களை போக்கிடுவார்    

எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி

எங்க கருப்பன் வரான் எங்க கருப்பன் வரான் 


கார்மேகம் போல வரான் 

அந்தா வர்றான் இந்தா வர்றான் 

நாகவல்லி கொண்டு வர்றான் 

ஒய்..முன்கோப காரன் வர்றான் 

அருவாளு தூக்கி வர்றான் 


ஜெவ்வாது வாசகாரன் 

வெள்ளிப் பிரம்பு கொண்டு  வர்றான் 

ஒய்.. வேகமாக ஆடி வர்றான் 

வேகமாக ஓடி வர்றான் 

வாட்ட சாட்டமாக வர்றான் 


பம்பாநதி வீரத்திலே 

கருப்பன் வரும் வேளையிலே 

பம்பாநதி குளிச்சி வர்றான் 

கருப்பசாமி ஆடி வர்றான் 

கரண்ட அளவு தண்ணியிலே 

தள்ளிக் கொண்டு வாரானப்பா 


சாமி முட்டளவு தண்ணியிலே 

முழுங்கி கொண்டு வாரானப்பா 

அரையளவு தண்ணியிலே 

துள்ளிக் கொண்டு ஓடி வர்றான் 

கழுத்தளவு தண்ணியிலே 

கருப்ப சாமி நீந்தி வர்றான் 

அந்தளவு தண்ணியிலே 

அங்காரமா ஓடி வர்றான்

எங்க கருப்பன் ஓடி வர்றான் 

எங்க கருப்பன் ஓடி வர்றான் 


ஒய் பம்பையிலே குளிச்சி வர்றான் 

பாங்காக வர்றான் ஐயா

அந்தா வர்றான் இந்தா வர்றான் 

பெரியான வட்டம் வர்றான் 

சிரியான வட்டம் வர்றான் 

ஒய் கரிமலையை ஏறி வர்றான் 

பகவதியை வணங்கி  வர்றான்

கரியிலாந்தோடு வர்றான்  

இலவம் தாவளம் கடந்து வர்றான் 


சாமி முக்குழிய  தாண்டி வர்றான்

அழுதாமேடு உச்சி வர்றான் 

சாமி அழுதையிலே குளிச்சி வர்றான் 

காளை கட்டி தொட்டு வர்றான் 

சாமி பூங்காவனம் புகுந்து வர்றான் 

எரிமேலி வாரானய்யா 

வாவர் சாமி கூட வர்றான் 

    

எரிமேலி வந்து இறங்கிய கருப்பன் சுற்றும் முற்றும் பார்த்து எம்பெருமான் கருப்பனுக்கு மலர்கள்  என்றால் கொள்ளை ப்ரியம் அவர் மலர்களால்  சல்லடை கட்டி வருகின்ற வேளையில் அஹா அஹா காண கண்கோடி வேண்டும் அவை என்னென்ன மலர்கள் என்று கேட்டால்.. 


எடுத்து வைக்கும் கால்களுக்கு சாமந்தி சள்ளடையாம் 

முன்னே வைக்கும் கால்களுக்கு முல்லைப்  பூ சள்ளடையாம்

பின்னே வைக்கும் கால்களுக்கு பிச்சி  பூ சள்ளடையாம் 

அள்ளி வைக்கும் கால்களுக்கு அரளி பூ சள்ளடையாம் 

துள்ளி வைக்கும் கால்களுக்கு துளசியால   சள்ளடையாம் 

வீசி வைக்கும் கால்களுக்கு வீரத்தாலே ச்ள்ளடையாம் 

துள்ளி வைக்கு கால்களுக்கு அருகம்புல் சள்ளடையாம் 


ஒய் உச்சந்தல கட்டி வர்றான் 

புளியாட்டும் ராஜா வர்றான் 

சபரிமலை காவல்காரன் 

ஆங்காரமாய் ஓடி வர்றான் 

தமிழ் நாட்டு எல்லையிலே 

தாண்டி தாண்டி வாரானய்யா 

செங்கோட்ட கருப்ப வர்றான் 

தென்காசி சுடல வர்றான் 

ஆம்பூரு சுடல வர்றான் 

சாத்தானறு  சுடல வர்றான் 

அங்காரமாய் வாரானய்யா 

ஆவேசமாய் வாராரய்யா 

ஒய் போராடி வாராரய்யா 

காவலாளி வாராரய்யா 

பாபநாசம் கோட்டை குள்ளே 

துணப் பேச்சி கூட வர்றான் 


தேவர்கள் மலர் சொரியும் சொரிமுத்து அய்யனார் கோவில் வந்து இறங்கிய எம்பெருமான் கருப்பன் யார் யாரை வணங்குகிறான் என்று கேட்டால் 


என்னன்னேன் சேட்டனடா 

திரு மகாலிங்க சாமியரே

தட்சனாமூர்த்தி சாமி  

ஒய் சங்கிலி பூதத்தாரே 

பாதாள பூதத்தாரே 

மேல் வாச பூதத்தாரே 

சுடர் மாடன் சாமியரே 

ஒய் தலைவனான சாமியரே 

உண்டில் மாடன் சாமியரே 

பள்ளி மாடன் சாமியரே 

உக்ரகாளி தாயாரே 

வன பேச்சி தாயாரே 

ஜக்கம்மா தாயாரே 

வண்டி மலச்சி தாயாரே 

பட்டராயன் சாமியரே 

ஒய் கரடி மாடன் சாமியரே 

அக்ஸ்தியின் மாமுனியும் 

2 (ஆங்காரமாய் காட்சி தந்தார் 

அக்ஸ்தியின் மாமுனியும் )2


இப்படியாக தரிசித்து கொண்டு வந்த எம்பெருமான் கருப்பன் இந்த ஐயப்பன் மலர் பூஜை வருவதற்கு ஆவல் கொண்டு கண்ணிமாரையும்  சாமி மாரையும்  ஐயப்ப மாரையும் மாளிகைபுரத்தம்மனையும் ஆன்மீக நெஞ்சங்களையும் வாழ்த்தி அருள வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இந்த ஐயப்பன் பூஜைக்கு கருப்பன் வருகிறான் 


ஆங்காரமாய் பரவசமாய் உதிரமாய் ஓடி வருகிறான் 

எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி

2 ( கருப்பன் வர்றான் கருப்பன் வர்றான் 

ஆங்காரமாய் ஓடி வர்றான் )2

ஒய் ஆவேசமாய் தேடி வர்றான் 

கருப்பன் வர்றான் கருப்பன் வர்றான் 

கருப்பன் வர்றான் கருப்பன் வர்றான் 


ஸ்வாமியே ........ சரணம் ஐயப்போ .. 

எங்க கருப்ப சாமி.. அவர் எங்க கருப்ப சாமி...... 

கருப்பண்ண ஸ்வாமியே.... சரணம் ஐயப்போ...

சத்குரு நாதனே சரணம் ஐயப்போ ....


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Table of Contents
ki ui