HARIVARASANAM LYRICS MEANING TAMIL & ENGLISH
ஹரிஹரத்மஜ அஷ்டகம் என்று அழைக்கப்படும் ஹரிவராசனம் sabarimala ஐயப்பனுக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட ஓர் தெய்வீகம் நிறைந்த பாடல் அப்படிப்பட்ட இந்த பாடல் உருவான வரலாறு மற்றும் ஹரிவரசனம் பாடலின் பொருளை இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். சுவாமியே சரணம் ஐயப்பா.
ஹரிவரசனம் அறிமுகம்
சபரிமலை என்றதுமே கோயிலின் நடை சாத்தும் போது ஒழிக்கப்படும் ஹரிவரசனம் பாடல் அனைவருக்கும் நினைவில் தோன்றாமல் இருக்காது. அந்தளவுக்கு ஐயப்ப பக்தர்கள் மனதில் நீங்க இடம்பிடித்து இருக்கும் இந்த பாடலை எமுதியவர் ஒரு தமிழர் யார் அவரால் எப்போது ஹரிவரசனம் பாடல் எழுதப்பட்டது என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஹரிவரசனம் வரலாறு
தமிழ்நாட்டின் தென்பகுதியில் அமைந்திருக்கும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சியை பூர்வீகமாக கொண்ட கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர் இவர் தான் ஹரிவரசனம் பாடலை எமுதியவர். இவரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் முன்னொரு காலத்தில் வசதி இல்லாத குடும்பமாக இருந்தாலும், தன் வீட்டிற்கு வருபவர்களை பசியாற்றி அனுப்பும் வழக்கத்தை கொண்ட குடும்பமாக கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயரின் பரம்பரை இருந்துள்ளது.
மணிகண்ட சுவாமியான ஐயப்பன், தன் தாயின் தலைவலியை தீர்க்க புலிப் பால் தேடி வனத்திற்குள் புகுந்தபோது இந்த வழியாக வந்ததாகவும், பசி மற்றும் களைப்புடன் இருந்த மணிகண்டக்கு அந்த வீட்டினர் கம்பு தானியம் கொண்டு கூழ் செய்து கொடுத்ததாகவும், கம்புக் கூழ் கொடுத்ததால் இந்தக் குடும்பத்திற்கு 'கம்பங்குடி' என்ற பெயர் அமைந்ததாகவும் சில கட்டுரைகள் கூறுகிறது. ஒரு முறை கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர் ஐயப்பனை தரிசித்துக் கொண்டிருந்த போது, ஹரிவராசனம் பாடலை எழுதியதாக கூறப்படுகிறது. இவர் 1920-ம் ஆண்டு (சாஸ்தா ஸ்துதி கதம்பம்) என்ற நூலை எழுதி பிரசுரித்தார், இந்த நூலில் ஐயப்பனைப் பற்றிய ஏராளமான கீர்த்தனைகள் இருந்தாலும் அவற்றில் முக்கியமானதாக இந்த 'ஹரிவராசனம்..' கீர்த்தனை இன்றளவும் போற்றப்படுகிறது.
1950- ஆம் ஆண்டு காலகட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில் தீவிபத்தில் சிக்கி சேதம் அடைந்தது அதற்குப் பிறகு தேவப் பிரசன்னம் பார்க்கப்பட்டு, சபரிமலை கோவில் புனரமைக்கப் பட்டுள்ளது. அதற்கு பிறகு தான் 'ஹரிவராசனம்..' பாடலை ஐயப்பனுக்கு அர்த்தஜாம பூஜை முடிந்து திரு நடை சாத்தும் போது பாடும் பாடலாக இருக்கட்டும் என்று மாற்றியிருக்கிறார்கள். அதற்கு முன்பு வரை, புல்லாங்குழலில் இசைத்துதான் நடை சாத்தும் வழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது.
::ஹரிவரசனம் பாடலில் அமைப்பு::
ஹரிவராசனம் எட்டு சரணம் (அஷ்டகம்) கொண்டுள்ளது ஒவ்வொன்றும் ஐயப்பனின் பெருமையையும் மற்றும் பண்புகளையும் விவரிக்கிறது. பாடலின் வரிகள் இறைவனின் அழகையும், கருணையையும், தெய்வீக சக்திகளையும் போற்றுகின்றது
வசனம் 1 : ஐயப்பன் தனது புனிதமான இருப்பிடத்தில் அமர்ந்திருப்பதை விவரிக்கிறது, அவரது தெய்வீக இருப்பை சிறப்பித்துக் காட்டுகிறது.
வசனம் 2 : தெய்வத்தின் கருணை மற்றும் கருணையைப் போற்றுகிறது.
வசனம் 3 : ஐயப்பனை பாதுகாவலராகவும், விடுதலை அளிப்பவராகவும் சித்தரிக்கிறது.
வசனம் 4 : தெய்வத்தின் அழகையும் அருளையும் போற்றுகிறது.
வசனம் 5 : ஐயப்பனின் உச்ச சக்தியையும், தீமைகளை அழிப்பவராகவும் அவரது பங்கை அங்கீகரிக்கிறது.
வசனம் 6 : தெய்வத்தின் எங்கும் நிறைந்திருப்பதையும் சர்வ வல்லமையையும் வலியுறுத்துகிறது.
வசனம் 7 : ஐயப்பனின் அருளையும் மகிமையையும் கொண்டாடுகிறது.
வசனம் 8 : தெய்வத்தின் ஆசீர்வாதம் மற்றும் பாதுகாப்பிற்கான பிரார்த்தனையுடன் முடிவடைகிறது.
HARIVARASANAM LYRICS MEANING TAMIL
🔅ஹரிவராசனம் விஸ்வமோகனம்🔅
🔅ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்🔅
🔅அரிவிமர்தனம் நித்யநர்த்தனம் 🔅
🔅ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே🔅
மிகச் சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவரும், பிரபஞ்சத்தையே தன் முறுவலால் மோகிக்கச் செய்பவரும், ஹரிதம் என்னும் குதிரையில் (ஹரித: என்றால் சூரியன், அவனது தேரில் உள்ள ஏழு குதிரைகளின் பெயர் ஹரிதம்)
பவனி வரும் சூரியனால் ஆராதிக்கப்படும் பாதங்களை உடையவரும், சத்ருக்களை அழிப்பவரும், நித்ய நர்த்தனம் புரிபவருமான ஹரி- ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.
🔅சரணகீர்த்தனம் சக்தமானசம்🔅
🔅பரணலோலுபம் நர்த்தனாலஸம்🔅
🔅அருணபாஸுரம் பூதநாயகம்🔅
🔅ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே🔅
சரணகோஷத்தால் மகிழ்பவரும், பிரபஞ்சத்தின் இயக்கத்திற்காக நடனமாடுபவரும், உதிக்கும் சூரியனொத்த ஒளிமயமானவரும், பூத நாயகனுமாகிய ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.
🔅ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம்🔅
🔅ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம்🔅
🔅ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்🔅
🔅ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே🔅
உலகின் உண்மைப் பொருளாகவும், உலக உயிர்களுக்கு நாயகனாகவும்
தன்னை சரணடைந்தவர்க்கு எல்லாவளமும் அளிப்பவரும், ஓங்கார மந்த்ரமாய் இருப்பவரும், இசையில் ப்ரியம்/நாட்டம் உடையவருமான ஹரி- ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.
🔅துரகவாகனம் ஸுந்தரானனம்🔅
🔅வரகதாயுதம் வேதவ-வர்ணிதம்🔅
🔅குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்🔅
🔅ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே🔅
குதிரை வானரும், அழகிய முகமுடையவரும், கதாயுதம் ஏந்தியவரும், தேவர்களால் வர்ணிக்கப்படுபவரும், குருவைப் போல ப்ரியம் உள்ளவரும், கீர்த்தனங்களில் ப்ரியமுடையவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.
🔅த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்🔅
🔅த்ரனயனப்ரபும் திவ்யதேசிகம்🔅
🔅த்ரிதசபூஜிதம் சிந்திதப்ப்ரதம்🔅
🔅ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே🔅
மூன்றுலகிலும் அர்ச்சிக்கப்படுபவரும், எல்லா தெய்வங்களின் அம்சமாக விளங்குபவரும், மூன்று கண்களை உடையவரும், சிறந்த குருவாக விளங்குபவரும், வேண்டுவதை அளிப்பவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.
🔅பவபயாவஹம் பாவகாவுகம்🔅
🔅புவனமோகனம் பூதிபூஷணம்🔅
🔅தவளவாஹனம் திவ்யவாரணம்🔅
🔅ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே🔅
பயத்தை போக்குபவரும், பக்தருக்கருள்வதில் தந்தை போலும், உலகத்தை தன் மாயையால் மயக்குபவரும், விபூதி தரித்தவரும், வெள்ளை யானையை வாகனமாக கொண்டவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.
🔅களம்ருதஸ்மிதம் ஸுந்தரனானம்🔅
🔅களபகோமளம் காத்ரமோஹனம்🔅
🔅களபகேசரி வாஜிவாஹனம்🔅
🔅ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே🔅
மதுரமான, மிருதுவான புன்முறுவல் உடையவரும், சுந்தர முகமுடையவரும், இளமையும், மென்மையும் உடையவரும், மயங்க வைக்கும் உடலமைப்புக் கொண்டவரும், யானை, சிங்கம், குதிரை போன்றவற்றை வாகனமாக கொண்ட ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.
🔅ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரதம்🔅
🔅ச்ருதிவிபூஷணம் ஸாதுஜீவனம்🔅
🔅ச்ருதிமனோகரம் கீதலாலஸம்🔅
🔅ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே🔅
சரணடைந்தவர்களிடத்து அன்புடையவரும், நினைத்ததை உடனே அளிப்பவரும், வேதங்களை ஆபரணமாக அணிந்தவரும், ஸாதுக்களிடத்து வசிப்பவரும், வேதகோஷங்களில் மகிழ்பவரும், கீதங்களில் லயிப்பவருமான
ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.
HARIVARASANAM LYRICS MEANING ENGLISH
🔅Harivarasanam Viswamohanam🔅
🔅Haridadhiswaram Aaradhya Padukam🔅
🔅Arivi Mardhanam Nithya Narthanam🔅
🔅Hariharathmajam Devamashraye🔅
🙏Saranam Ayyappa Swamy Saranam Ayyappa🙏
🙏Saranam Ayyappa Swamy Saranam Ayyappa🙏
One who is seated on the supreme Simhasana. One who enchants the Universe. One whose holy feet are worshiped by Surya. One who kills the enemies of good thought and who enacts cosmic dance every day. Oh, Son of Hari And Hara, I take refuge in you Ayyappa, I take refuge in you Ayyappa.
🔅Saranakirtanąm Bąkhtamąnąsąm🔅
🔅Bhąratanątyam Narthąnasalą🔅
🔅Aruną Bhasurą Bhoothą Nayakąm🔅
🔅Hąriharąthmająm Devąmashrąye🔅
🙏Sarąnam Ayyappą Swamy Sarąnam Ayyąppą🙏
🙏Sarąnam Ayyappą Swamy Sranam Ayyąppą🙏
One whose mind gladdens on hearing Sarana Gosham, One who is a great ruler of the Universe, One who loves to dance, One who shines in the rising Sun, One who is the master of all beings, Oh Hariharaputra Deva, I take refuge in you Ayyappa, I take refuge in you Ayyappa.
🔅Pranaya Satyakam Praananayakam🔅
🔅Prąnthakalpakąm Suprabhanjithąm🔅
🔅Pranąvam Anidram Kęerthaną Priya🔅
🔅Hariharathmajam Devamashraye🔅
🙏Saranam Ayyappa Swamy Sarąnam Ayyąppą🙏
🙏Saranam Ayyappa Swamy Saranam Ayyąppa🙏
One whose soul is truth, One who is the darling of all souls, One who created the universe, One who shines with a glittering Halo, One who is the abode of “OM”, One who loves songs, Oh Hariharaputra Deva, I take refuge in you Ayyappa, I take refuge in you Ayyappa.
🔅Thuraga Vahanam Sundaranana🔅
🔅Varagadhayudham Vedavavarnitham🔅
🔅Gurukrupa Kąram Keerthana Priya🔅
🔅Harihąrathmająm Devamąshraye🔅
🙏Saranam Ayyąppa Swami Sarąnam Ayyappa🙏
🙏Saranąm Ayyappa Swamy Saranąm Ayyąppa🙏
One who has a pretty face One who rides a horse, One who has a pretty face, One who has the blessed mace as a weapon, One who bestows grace like a teacher, One who loves songs, Son of Hari and Hara, I take refuge in you Ayyappa, I take refuge in you Ayyappa.
🔅Tribuvanarchitam Devathathmakam🔅
🔅Trinayanam Prabhum Divyądeshikam🔅
🔅Tridąshapoojitham Chinthithapradam🔅
🔅Harihąrathmajam Devamashrąye🔅
🙏Saranam Ayyappa Swamy Saranam🔅 Ayyappa🙏
🙏Saranam Ayyappa Swamy Saranam Ayyappa🙏
One who is worshiped by the three worlds, One who is the soul of all gods, One who is the lord of Shiva, One who is worshiped by devas, One who is worshiped three times a day, One whose thought is fulfilling, Son of Hari and Hara I take refuge in you Ayyappa, I take refuge in you Ayyappa.
🔅Bhavabhayapaham Bhavukavaham🔅
🔅Bhuvanamohąnam Bhoothibhooshąnam🔅
🔅Dhavala Vahanam Divya Vąaranam🔅
🔅Harihąrathmajam Devamashraye🔅
🙏Saranam Ayyappa Swamy Sąranam Ayyappa🙏
🙏Saranam Ayyappa Swamy Saranam Ayyappa🙏
One who destroys fear, One who brings prosperity, One who is the enchanter of the universe, One who wears holy ash as an ornament, One who rides a white elephant, Son of Hari and Hara, I take refuge in you Ayyappa, I take refuge in you Ayyappa.
🔅Kaląmrudusmitham Sundąranana🔅
🔅Kalabhąkomalam Gathrąmohanąm🔅
🔅Kaląbha Kesąri Vaji Vahanam🔅
🔅Harihąrathmajam Devąmashrąye🔅
🙏Sarąnam Ayyąppa Swąmy Sarąnam Ayyappa🙏
🙏Sarąnam Ayyappą Swamy Saranąm Ayyąppa🙏
One who blesses with an enchanting smile, One who has is very pretty, One who is adorned by sandal paste, One who has a pretty mien, One who is a like a lion to the elephants, One who rides on a tiger, Son of Hari and Hara, I take refuge in you Ayyappa, I take refuge in you Ayyappa.
🔅Srithąjanąpriyam Chinthithaprądam🔅
🔅Sruthivibhushanam Sadhujeevanam🔅
🔅Sruthi Mąnoharam Geethąla Sam🔅
🔅Harihąrathmajam Devamashraye🔅
🙏Sarąnam Ayyappa Swamy Sarąnam Ayyappa🙏
🙏Sarąnam Ayyappa Swamy Sarąnam Ayyappa🙏
One who is dear to his devotees, One who fulfills wishes, One who is praised by Vedas, One who blesses the life of ascetics, One who is the essence of Vedas, One who enjoys divine music, Son of Hari and Hara, I take refuge in you Ayyappa, I take refuge in you Ayyappa.
— SWAMIYE SARANAM AYYAPPAA —-
