Virtual Q Booking – படிப்படியாக விரிவான வழிகாட்டி
சபரிமலை யாத்திரைக்கு பொதுவாகவே Mandala மற்றும் Makaravilakku காலங்களில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இயல்பாகவே இவ்வளவு பெரிய கூட்டத்தில் அனைத்து பக்தர்களும் காத்திருந்து தரிசனம் செய்வது என்பது சற்று கடினமாகவே இருப்பதால் இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு Kerala Police மற்றும் Travancore Devaswom Board இணைந்து Virtual Q என்ற சிஷ்டத்தை அறிமுகம் செய்தனர்.
1. Virtual Q Booking என்றால் என்ன?
Virtual Q Booking என்றால், பக்தர்கள் தங்களது சபரிமலை யாத்திரைக்கு முன்பகவே ஆன்லைன் மூலமாக தங்களுக்கு தேவையான தரிசன தேதியையும் , நேரத்தையும் பதிவு செய்து கொள்ளலாம் . பதிவு செய்யப்பட்ட அந்த slot-இல் யாத்திரைக்கு வரும் போது பக்தர்கள் ஓர் அளவில் கூட்டத்தில் சிக்காமல், நேரடியாக சன்னிதானம் வரை செல்ல முடியும். இதனால் பக்தர்கள் கூட்டமானது ஓர் அளவில் கட்டுப்படுத்தப்படுகிறது, யாத்திரையானது சுலபமாகிறது.
Booking செய்யும் போது நாள் (date), நேரம் (time slot) தேர்வு செய்ய வேண்டும்.
அந்த slot-க்கு ஏற்றவாறு Pilgrim entry- யானது அனுமதிக்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் வரையறுக்கப்பட்ட அளவிற்கு மட்டும் slot-கள் திறந்து இருக்கும்.
:இதனால்:
பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கலாம்.
பக்தர்கள் பாதுகாப்பாகவும் , சீராகவும் தரிசனம் செய்யலாம்.
Crowd management எளிதாகிறது.
2. Booking செய்ய தேவையான முக்கிய விபரங்கள்
Virtual Q booking செய்வதற்கு கீழே உள்ள details மிகவும் அவசியமாகும்.
Mobile Number (OTP verification க்காக)
Email ID (confirmation slip க்கு)
ID Proof (Aadhar card, Voter ID, Passport, Driving License)
Pilgrim Details (பெயர், வயது, பாலினம், முகவரி)
👉 Children (5 வயதிற்குள்)க்கு booking தேவையில்லை.
3. Virtual Q Booking – Step-by-Step Process
3.1 Websiteக்கு செல்வது
🔗 Visit Official Booking Site
👉 https://sabarimalaonline.org/
OR
👉 https://sabarimala.kerala.gov.in
Browser இல் கொடுக்கப்பட்டுள்ள Link லிங்க ஐ Click கிளிக் செய்து அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
Fake மற்றும் third-party sites avoid செய்யவும்.
3.2 User Registration / Login
முதலில் Sign Up / Register செய்ய வேண்டும்.
New User என்றால் → “Sign Up” கிளிக் செய்து Name, Mobile number, Email, Password கொடுத்து account -ஐ உருவாக்க வேண்டும்.
Already User என்றால் → “Login” கிளிக் செய்து mobile number மற்றும் password கொடுத்து Login உள்ளே செல்லவும்.
3.3 Virtual Q Option தேர்வு
Login செய்த பிறகு, dashboard-ல் Virtual Q Booking என்ற menu-வை தேர்வு செய்யவும்.
Calendar-ல் நீங்கள் யாத்திரை செல்ல விரும்பும் நாள் (Date) தேர்வு செய்யவும்.
Calendar-இல் பச்சை நிறத்தில் திறந்துள்ள தேதிகள் மட்டும் booking செய்ய முடியும்.சிவப்பு நிறத்தில் இருக்கும் slot ஐ தேர்வு செய்ய முடியாது.
அந்த நாளில் கிடைக்கும் Time Slots -இல் உங்களுக்கு ஏற்ற நேரத்தையும் தேதியையும் தேர்வு செய்யவும்.
(உதா: 8.00–9.00 AM, 10.00–11.00 AM)
3.4 Pilgrim Details சேர்த்தல்
குழுவாக புக்கிங் செய்ய விரும்பினால் அந்த slot-க்கு உங்களுடன் வரும் அனைவரின் விவரங்களையும் (Name, Age, Gender, ID Proof No.) உள்ளிடவும்.
ஒவ்வொரு booking-க்கும் ஒரு ID proof மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். Duplicate names / ID-ஐ system reject செய்யும். அதிகபட்சம் ஐந்து அல்லது பத்து நபர்கள் மட்டுமே பதிவு செய்து கொள்ள முடியும்.
பின்னர் process என்பதை தேர்வு செய்யவும்.
3.5 Confirmation & Download
Pilgrim details உள்ளீடு செய்த பிறகு Confirm Booking செய்யவும்.
System, உங்களுக்கு Booking Slip உருவாக்கி தரும்.
இதில் Pilgrim Name, Darshan Date, Time Slot, QR Code ஆகியவை இருக்கும்.
இந்த slip-ஐ PDF download செய்து, print எடுத்துக் கொள்ளவும்.
Darshan நாளில், இந்த slip + ID Proof காட்டினால் மட்டுமே அனுமதி கிடைக்கும்.
💡 பயனுள்ள குறிப்புகள் (Tips for Devotees)
Mandala & Makaravilakku சீசனில் slots விரைவில் நிறைந்து விடும், எனவே 30–40 நாட்கள் முன்னதாகவே booking செய்யுங்கள்.
Group booking செய்யும்போது, அனைவரும் ஒரே நேரத்தில் வருவது அவசியம்.
Traffic & travel delay இருக்கலாம் → Nilakkal/Pamba-க்கு slot நேரத்துக்கு 2 மணி நேரம் முன்னதாக வந்துவிடுவது நல்லது.
Booking confirmation slip-ஐ mobile-ல் மட்டும் வைத்திருப்பது sometimes QR scan-இல் சிக்கல் தரலாம். எனவே print copy எடுத்துச் செல்லுங்கள்.
உங்கள் travel (bus / train / flight tickets) பயண திட்டத்தை Virtual Q slotக்கு ஏற்றவாறு ஏற்பாடு செய்யுங்கள்.
Crowd அதிகமுள்ள நாட்களை (Makara Jyothi day, Mandala closing day) தவிர்த்து booking செய்தால், சுலபமாக தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
Yathra season-இல் பக்தர்கள் நெரிசல் அதிகமிருப்பதால், slot நேரத்திற்கு குறைந்தது 2 மணி நேரம் முன்பே Nilakkal-க்கு வந்து விடுவது நன்று.
சுருக்கமாக
Virtual Q Booking system மூலமாக, பக்தர்கள் தங்களது சபரிமலை தரிசனத்தை சிரமமின்றி, கூட்ட நெரிசல் குறைந்து, திட்டமிட்ட நேரத்தில் அனுபவிக்க முடிகிறது.
Step 1: sabarimalaonline.org-ல் Login செய்யவும்
Step 2: Virtual Q தேர்வு செய்யவும்
Step 3: தேதி + நேரம் தேர்வு செய்யவும்
Step 4: Pilgrim details உள்ளிடவும்
Step 5: Slip download செய்து, ID proof உடன் கொண்டு செல்லவும்
Virtual Q என்பது சபரிமலை யாத்திரையை மிகவும் எளிதாக்கும் ஒரு digital வசதி. முன்பதிவு செய்தால், நீண்ட நேரம் காத்திராமல், ஒழுங்காகவும், பாதுகாப்பாகவும் சுவாமியை தரிசனம் செய்ய முடியும். சரியான ID Proof, Booking Slip வைத்திருந்தால், சபரிமலை யாத்திரை சிரமமின்றி நடைபெறும்.
Virtual Q Booking – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
1. Virtual Q என்றால் என்ன?
👉 Virtual Q என்பது சபரிமலை தரிசனத்திற்கு முன்பே ஆன்லைனில் ஒரு நாள் + நேரம் slot பதிவு செய்து வைக்கும் முறை. இதனால், கூட்டத்தில் நீண்ட நேரம் காத்திருக்காமல் நேரடியாக நியமிக்கப்பட்ட நேரத்தில் கோயிலுக்குள் செல்லலாம்.
2. Virtual Q Booking எங்கே செய்யலாம்?
👉 அதிகாரப்பூர்வ website sabarimalaonline.org booking செய்யலாம்.
3. Booking செய்ய என்ன தேவைகள்?
👉
Mobile Number (OTP Verification க்காக)
Email ID
ID Proof (Aadhar, Voter ID, Passport, Driving License)
Pilgrim details (Name, Age, Gender)
4. Booking charge எவ்வளவு?
👉 Virtual Q Booking முற்றிலும் இலவசம். (Accommodation / Prasadam மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும்).
5. ஒரே account-ல் எத்தனை பேருக்கு booking செய்யலாம்?
👉 ஒரே account-ல் ஒரு Group booking செய்யலாம். ஒவ்வொரு பயணிக்கும் தனித்தனி Name + ID proof சேர்க்க வேண்டும்.
6. Children-க்கு booking தேவையா?
👉 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு Virtual Q Booking தேவையில்லை. ஆனால் அவர்களுடன் வரும் பெற்றோரின் slot booking slip காட்ட வேண்டும்.
7. Booking செய்த slot நேரத்தில் வர முடியாவிட்டால் என்ன செய்வது?
👉 Slot miss ஆனால் மீண்டும் அந்த நாளில் மற்றொரு slot-க்கு entry அனுமதி கிடையாது. அடுத்த நாள் / மற்றொரு தேதி மீண்டும் booking செய்ய வேண்டும்.
8. Booking cancel செய்ய முடியுமா? Refund கிடைக்குமா?
👉 Virtual Q booking cancel செய்யலாம். ஆனால் அது இலவசம் என்பதால் refund எதுவும் இல்லை. Accommodation / Prasadam booking cancel செய்தால் மட்டுமே refund policy இருக்கும்.
9. ID Proof எந்த வகைகள் ஏற்கப்படும்?
👉 Aadhar Card, Voter ID, Passport, Driving License போன்ற அரசு வழங்கிய அடையாள அட்டைகள் மட்டுமே ஏற்கப்படும். Xerox copy அல்ல, original எடுத்துச் செல்ல வேண்டும்.
10. Booking Slip-ஐ mobile-ல் காட்டினால் போதுமா?
👉 Mobile-ல் QR Code scan செய்யலாம். ஆனால் சில நேரங்களில் internet / mobile battery பிரச்சனை வந்தால் சிக்கல் உண்டாகும். எனவே print copy எடுத்துச் செல்ல பரிந்துரைக்கப்படுகிறது.
11. Senior citizens / பெண்கள் / குழந்தைகள் தனி queue இருக்கிறதா?
👉 ஆம், சில நேரங்களில் senior citizens, பெண்கள், குழந்தைகளுக்கு என்று தனி arrangement இருக்கும். ஆனால் Virtual Q slot booking அனைவருக்கும் கட்டாயம்.
12. Darshanக்கு எத்தனை நேரம் slot கிடைக்கும்?
👉 ஒவ்வொரு slot-மும் 1 மணி நேரம். உதாரணம்: 8.00–9.00 AM. Pilgrims அந்த நேரத்துக்குள் entry செய்ய வேண்டும்.
13. One day-க்கு ஒரு pilgrimக்கு multiple bookings செய்யலாமா?
👉 முடியாது. ஒர்நாளில் ஒரு பக்தருக்கு ஒரு slot மட்டுமே அனுமதிக்கப்படும். Duplicate bookings cancel ஆகும்.
14. Offline queue system இன்னும் உள்ளதா?
👉 சில நேரங்களில் மிக குறைந்த அளவிலான offline entry இருக்கும். ஆனால் முக்கியமாக Virtual Q booking வைத்தே அதிகமான பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
15. Makara Jyothi day & Mandala closing day slots எப்படி?
👉 இந்த நாட்களில் demand அதிகமாக இருக்கும். Booking open ஆனதும் சில நிமிடங்களில் slots நிறைந்து விடும். அதனால் நேரம் தப்பாமல் login செய்து முன்பதிவு செய்ய வேண்டும்.
🙏 Swamiye Saranam Ayyappa🙏
